த.வீ.செ., பள்ளி மாணவர்கள் அசத்தல்
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.பள்ளி அளவில் மாணவர் சர்கேஷ் 600க்கு 591 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவிகள் கலைச்செல்வி 590 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், கீதா 588 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி செயலர் செந்தில்நாதன் பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியர்கள் பாபு, சூசைராஜ், சுரேஷ், கோபிநாத், ஆர்த்தி சுரேஷ், இந்துமதி, ஜோஷியா, லாவண்யா, விக்டர்ராஜ் உடனிருந்தனர்.