உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

சேத்தியாத்தோப்பு : அள்ளூர் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் கிராமம் மகாசக்தி மாரியம்மன், செல்லியம்மன் கோவிலில் 24ம் ஆண்டு சித்திரை மாத தீமிதி விழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று காலை 7.00 மணிக்கு காத்தவராயன் கழு மரம் ஏறுதல் நடந்தது. மாலை வெள்ளாற்றில் இருந்து சக்திகரகம் ஊர்வலம் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை