உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

புதுச்சத்திரம்; பூவாலை தீப்பாய்ந்தால் அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பூவாலை தீப்பாய்ந்தால் அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 15ம் தேதி சாகை வார்த்தல், 16ம் தேதி திருவிளக்கு பூஜை, 17ம் தேதி அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை கரகம் அலங்கரித்து, தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (19ம் தேதி) இரவு 9:00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை