மேலும் செய்திகள்
வாய்க்கால் சீரமைப்பு பணி பொதுமக்கள் வாக்குவாதம்
13-Oct-2024
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சேர்மன் முன்னிலையிலேயே தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லிக்குப்பம் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்த பணிகளை ஆய்வு செய்து அதற்கான பில் எழுதி முடிக்க வேண்டியது பணி மேற்பார்வையாளர் சரவணணின் வேலையாகும்.அது சரியாக உள்ளதா என ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கி கமிஷ்னர் மூலம் பணம் வழங்குவது இன்ஜினியர் வெங்கடாஜலம் பணியாகும்.ஆனால் பணி மேற்பார்வையாளருக்கும் இன்ஜினியருக்கும் ஒத்துவராமல் இருந்து வருகின்றனர். எனவே இவர் சொல்லும் வேலையை அவர் செய்வதில்லை.அவர் பில் எழுதி அனுப்பினால் இன்ஜினியர் காலதாமதம் செய்வது என ஈகோ பிரச்னை உள்ளது.மேலும் முடிந்த வேலைக்கு அரசு அனுமதித்த தொகையை விட பணி மேற்பார்வையாளர் குறைத்து பில் வழங்குவதாக ஒப்பந்ததாரர்கள் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர்.அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பிரச்னையை சரி செய்ய சேர்மன் ஜெயந்தி முன்னிலையில் சமாதானம் கூட்டம் நடந்தது.ஆனால் எதிர்பாராதவிதமாக ஒப்பந்ததாரர்கள் பணி மேற்பார்வையாளர் சரவணனிடம் தகராறு செய்ய துவங்கினர்.அவரும் பதிலுக்கு தகராறு செய்ததால் பதட்டம் நிலவியது.இதை நகராட்சித் தலைவரும், கமிஷனரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததால் பிரச்னைக்கு முடிவு ஏற்படாமல் சமாதானம் கூட்டம் முடிந்தது.இந்த பணி மேற்பார்வையாளர் இருக்கும் வரை பணிகளை எடுக்க மாட்டோம் என ஒப்பந்ததாரர்கள் ஆவேசமாக கூறிவிட்டு சென்றதால் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
13-Oct-2024