உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்குறள் வகுப்பு

திருக்குறள் வகுப்பு

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த ஒரத்துார் ஞான சித்தர் குடிலில் திருக்குறள் வகுப்பு நடந்தது. உலகப் பொதுமறையான திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 'வள்ளுவமாய் வாழ்வோம்' என்ற தலைப்பில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை சிதம்பரம் அடுத்த ஒரத்துார் ஞான சித்தர் குடிலில் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. ஆசிரியர் மகிழ்நன் திருக்குறள் பற்றி விளக்கம் அளித்தார். மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இயற்கை வாழ்வியல் ஆலோசகர் சுந்தரபாண்டியன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை