மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் திருக்குறள் விழா
22-Jul-2025
கடலுார், : பண்ருட்டி அடுத்த மேலிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியை மகாலட்சுமி வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறள் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் சரோஜா, சியாமளா போட்டிகளை நடத்தினர். உலக திருக்குறள் பேரவையின் மாவட்ட தலைவர் பாஸ்கரன் பங்கேற்று போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி, திருக்குறளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஆசிரியர்கள் சக்திவேல், பிரபு, சத்யா மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.
22-Jul-2025