உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  திருக்குறள் பயிலரங்கம்

 திருக்குறள் பயிலரங்கம்

கடலுார்: கடலுார் அடுத்த கோட்டூர் துரை நினைவு துவக்கப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில், திருக்குறள் பயிலரங்கம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை அன்பரசி தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியை சுந்தரி வரவேற்றார். மாணவர்களிடையே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா போட்டி நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் தனலட்சுமி, சிவகாமி, நந்தினி போட்டிகளை நடத்தினர். ஆசிரியை அருந்ததி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். உலக திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் பாஸ்கரன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !