உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தேரி பெருமாள் கோவிலில் திருப்பாவை உற்சவம் துவக்கம்

புத்தேரி பெருமாள் கோவிலில் திருப்பாவை உற்சவம் துவக்கம்

திட்டக்குடி; மார்கழி மாதம் துவங்கியதையொட்டி, புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாவை உற்சவம் துவங்கியது.மார்கழி மாதம் முதல் நாளான நேற்று, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதையொட்டி, நேற்று அதிகாலை 5:30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமி, பிரகாரத்தில் உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடி, கோவில் பிரகாரத்தை வலம் வந்து, சுவாமியை வழிபட்டு சென்றனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர். இதேபோன்று, பெண்ணாடம் மேற்குரத வீதி வேதநாராயணபெருமாள், கருங்குழி தோப்பு பரிமள ரங்கநாதர், இறையூர் அழகிய மணவாள பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் மார்கழி முதல் நாள் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி