மேலும் செய்திகள்
த.வெ.க., மாநகர செயலரை தாக்கிய கும்பலுக்கு வலை
28-Sep-2026
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், கடித்த பாம்பை கையில் பிடித்தபடி கடை வீதியில் நடந்து சென்ற நபரால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பெரியக்குளம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இன்று (அக்.,27) மாலை வாகனங்களில் பெட்ரோல் போட ஏராளமானோர் நின்றிருந்தனர். அப்போது, 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அதனைக் கண்ட மக்கள் அலறி அடித்து ஓடினர். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், பெட்ரோல் பங்க் அருகே உட்கார்ந்திருந்த காட்டுமன்னார்கோவில் அடுத்த குப்பங்குழியைச் சேர்ந்த அழகானந்தம்,55; என்பவர் பங்கிற்கு சென்று பாம்பை தேடினார். . பாம்பு மதில் ஓரமாக குரோட்டன்ஸ் செடிகளுக்கு இடையே நகர்ந்து சென்றது. அதனைக் கண்ட அழகானந்தம், லாவகமாக பாம்புவின் கழுத்தை பிடித்து துாக்கினார். அப்போது பாம்பு அழகானந்தத்தின் வலது கை நடுவிரலில் கடித்ததால் ரத்தம் சொட்டியது. இருப்பினும், அழகானந்தம் கையில் ரத்தம் சொட்ட, சொட்ட பிடிப்பட்ட சாரப் பாம்பை கையில் பிடித்துக் கொண்டு 'இந்த பாம்பு தான் சார் என்னை கடித்துவிட்டது' என கூறியப்படி 500 மீட்டர் துாரத்தில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு கடைவீதி வழியாக நடந்து சென்றார். அழகானந்தத்திடம் இருந்து பாம்பை, தீயணைப்பு துறையில் பாதுகாப்பாக பையில் அடைத்து, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டனர். பாம்பு கடிப்பட்ட அழகானந்தை்த, தீயணைப்பு வீரர் பன்னீர்செல்வம், அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்தார். பின்னர் ரத்த பரிசோதனையில் பாதிப்பு இல்லை என தெரிய வந்தபின் அவரை குப்பங்குழியில் உள்ள அவரது வீட்டில் விட்டனர். அழகானந்தம் இது போன்று பாம்பு பிடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. ரத்தம் சொட்டியவாறு கடைவீதியில் பாம்பு பிடித்து சென்ற சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
28-Sep-2026