உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெற்காசிய மர்தானி போட்டியில் திட்டக்குடி மாணவருக்கு வெண்கலம்

தெற்காசிய மர்தானி போட்டியில் திட்டக்குடி மாணவருக்கு வெண்கலம்

கடலுார்: தெற்காசிய அளவிலான மர்தானி தற்காப்புக்கலை போட்டியில், திட்டக்குடி மாணவர் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார்.இந்திய மர்தானி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், இரண்டாம் தெற்காசிய மர்தானி தற்காப்புக்கலை போட்டி, மேற்கு வங்கத்திலுள்ள ஜெய்கோன் நகரில் நடந்தது. போட்டி இந்தியா மர்தானி விளையாட்டு கூட்டமைப்பு தலைவர் திலீப்சிங் குமார், பொதுச்செயலாளர் சந்தோஷ் கண்டாரே மேற்பார்வையில் நடந்தது. பூடான் மர்தானி விளையாட்டு சங்க செயலாளர் சுசன் கேலஸ் பங்கேற்றார்.போட்டியில் இந்தியா, பூடான், நேபாளம் நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கடலுார் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஆதித்யவர்மன்,15, இந்தியா சார்பில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார்.தமிழ்நாடு மர்தானி விளையாட்டு சங்க தலைவர் மற்றும் இந்திய மர்தானி விளையாட்டு கூட்டமைப்பின் துணைத்தலைவர் கமலேஸ்வரன் மற்றும் பொது செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை