போக்குவரத்திற்கு இடையூறு செய்த மூன்று பேர் கைது
நெய்வேலி: நெய்வேலி, இந்திரா நகர் பஸ்நிறுத்தம் அருகே கையில் கற்களுடன் மதுபோதையில் மூன்று வாலிபர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் சுற்றித்திரிந்தனர். இதுபற்றி தகவலறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், விரைந்து சென்று அந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நெய்வேலி இந்திரா நகர் பி2 மாற்று குடியிருப்பை சேர்ந்த ஏழுமலை மகன் எழிலரசன்,27; கண்ணன் மகன் பாலாஜி,26; பழனிவேல் மகன் மணிவண்ணன்,23; என தெரியவந்தது. நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், வழக்குப் பதிந்து மூன்று பேரையும் கைது செய்தனர்.