உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் கஞ்சா பதுக்கிய மூவர் கைது: 21 கிலோ பறிமுதல்

நெய்வேலியில் கஞ்சா பதுக்கிய மூவர் கைது: 21 கிலோ பறிமுதல்

நெய்வேலி நெய்வேலியில் கஞ்சா பதுக்கிய மூவரை போலீசார் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் 28 பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெர்மல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள வீரன் கோவில் பின்புறம் தோப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த மூவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21 ஏ.டி.எஸ்., தெருவை சேர்ந்த சக்ரவர்த்தி மகன் சுதாகர், 26; இஸ்மாயில் தெருவை சேர்ந்த காமராசு மகன் மகேஷ் குமார், 27; கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் ரஞ்சித், 24 ; என, தெரியவந்தது.இதுகுறித்து தெர்மல் போலீசார் வழக்கு பதிந்து மூவரைம் கைது செய்து, அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த கும்பலை சேர்ந்த தீனா மற்றும் சுபாஷ் என்ற இருவர் தப்பியோடி விட்டனர். இந்த கஞ்சா விற்பனையில் நெய்வேலி அடுத்த செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் ராஜ்குமார், காடாம்புலியூர் அடுத்த கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் ஆதிகுரு ஆகியோர் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியந்தது.இவர்கள் இருவரும் ஏற்கனவே மற்றொரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை