மேலும் செய்திகள்
குண்டர் சட்டத்தில் நெய்வேலி ரவுடி கைது
26-Oct-2024
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இருவர் கைது
18-Oct-2024
கடலுார்: கடலுாரில் கூட்டு கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை, வண்டிப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, காளவாய் தெருவில் பதுங்கியிருந்த சிலரைசந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.அவர்கள் சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குட்டியாபிள்ளை மகன் பச்சையப்பன்,44, திருப்பாதிரிபுலியூர் சேகர் மகன் சுனோபா என்கிற சுந்தர், 35, பனங்காட்டை சேர்ந்த தயாளன் மகன் கஜேந்திரன்,32, என்பதும், அவர்கள் கூட்டு கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதும் தெரிந்தது.இதுகுறித்து கடலுார் முதுநநகர் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
26-Oct-2024
18-Oct-2024