உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை

கடலுாரில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை

கடலுார்: கடலுாரில் நேற்று காலை மின்னலுடன் கன மழை பெய்ததால் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் ஆந்திராவின் நெல்லுார்–நரசாபூர் இடையே நேற்று கரையை கடந்தது. இதன் காரணமாக கடலுாரில் நேற்று காலை 6:00 மணி முதல் இடி, மின்னலுடன் பரவலாக கன மழை பெய்தது. இதனால் லாரன்ஸ்ரோடு சுரங்கபாதை, பாரதி சாலை, நேதாஜி சாலை, பாதிரிக்குப்பம் மெயின் ரோடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. காலை 7 மணிக்கு பிறகு மழை நின்றது. காலையில் பெய்த கன மழை காரணமாக, கடலுார் தாலுகாவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை