மேலும் செய்திகள்
தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு
07-Dec-2024
கடலுார்; பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, தனித்தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு 2025 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. இதில் தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க டிச., 6ம் தேதி முதல் டிச., 17 வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று, விண்ணப்பம் பெற்று, தேர்வு கட்டணத்தை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.இதில் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால், சேவை மையங்கள் செயல்படாததால் தனித்தேர்வர்கள் பதிவு செய்ய முடியவில்லை. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், வழக்கமாக பதிவு செய்யும் தனித்தேர்வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனவே, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தனித்தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
07-Dec-2024