உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் டி.என்.பி.எஸ்.சி., இலவச  பயிற்சி வகுப்பு

கடலுாரில் டி.என்.பி.எஸ்.சி., இலவச  பயிற்சி வகுப்பு

கடலுார்; கடலுார் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 6ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ- மூலம் 645 காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசு அறிவிப்பு செய்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்கு விண்ணப்பிக்க ஆக., 13ம் தேதி, கடைசி நாள். விண்ணப்பம் www.tnpsc.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி துவங்குகிறது. இலவச பயிற்றி பெற விருப்பம் உள்ளவர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை