உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையை சீரமைக்க வர்த்தக சங்கம் மனு

சாலையை சீரமைக்க வர்த்தக சங்கம் மனு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் இருந்து பு.முட்லுார் செல்லும் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென, வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில், பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், பொதுச் செயலாளர் சாலிஹ் மரைக்காயர் அளித்த மனு: பரங்கிப்பேட்டையில் இருந்து பு.முட்லுார் வரை செல்லும் நெடுஞ்சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. பு.முடலுாரில் இருந்து பரங்கிப்பேட்டை ரயில்வே கேட் வரை சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும், இப்பகுதி களிமண் பகுதியாக இருப்பதாலும், இரு புறமும் வாய்க்கால் உள்ளதாலும் அடிக்கடி சாலை பழுதாவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பரங்கிப்பேட்டை ரயில்வே கேட்டில் இருந்து பு.முட்லுார் வரை சாலையை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை