உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரத்தில் இருந்து விழுந்த இளநீர் வியாபாரி பலி

மரத்தில் இருந்து விழுந்த இளநீர் வியாபாரி பலி

வடலுார், ஆக. 27- மரத்தில் இருந்து விழுந்த இளநீர் வியாபாரி இறந்தார் வடலூர் அடுத்த சேராக்குப்பத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் வீரமணி,35; இளநீர் வியாபாரி. இவர் நேற்று காலை அதே ஊரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் தோப்பில் தென்னை மரத்தில் இளநீர் வெட்ட ஏறியபோது தவறி கீழே விழந்தார். அதில் படுகாயமடைந்த வீரமணியை, குறிஞ்சிப்பாடி அரச மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவர் நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ