உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிகாரிகள் ஆய்வுக்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு

அதிகாரிகள் ஆய்வுக்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் தொழிலாளர் துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்க முயன்றதற்கு, வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் கடை வீதியில், கடலூர் தொழிலாளர் துறை அதிகாரிகள், வியாபாரிகளிடம் உள்ள தராசில் முத்திரை உள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது, வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்க முயன்றதாக தெரிகிறது. இதையறிந்த ஸ்ரீமுஷ்ணம் வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, தொழிலாளர் துறை அதிகாரிகள் வியாபாரிகளிடம், அறிவுறுத்திவிட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை