மேலும் செய்திகள்
டெங்கு முன் தடுப்பு பணி
10-Oct-2026
விருத்தாசலம்: விருத்தாசலத்தில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், தீவிர தொழுநோய் கண்டறியும் பயிற்சி முகாம் நடந்தது. விருத்தாசலம், காந்தி நகரில் நடந்த முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பாரிசெல்வி தலைமை தாங்கினார். இதில், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், ராஜ்மோகன், வீரமணி, கிரிநாத், நாராயணசாமி, தமிழ்வாணன், முல்லைநாதன், பரத், தாண்டவாரன் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர். முகாமில், பொதுமக்களுக்கு தொழுநோய் அறிகுறிகள், அவற்றை கண்டுபிடிப்பது எப்படி என விளக்கமளிக்கப்பட்டது. மருத்தவமில்லா மேற்பார்வையாளர் செல்லதுரை நன்றி கூறினார்.
10-Oct-2026