தீவன பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி
விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்பில் மேலாண்மை முறைகள் மற்றும் தீவன பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.இந்த பயிற்சியை, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார்.கால்நடை பல்கலை., பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய சிலம்பரசன், கலந்துகொண்டு கால்நடை விபரம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.மேலும் மாட்டு இனங்கள், மாடுகளை தேர்ந்தெடுத்தல், கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, கன்று மற்றும் கிடாரி மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, துாய்மை பால் உற்பத்தி மற்றும் மதிப்புகூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்து விளக்கினார்.இதில், பாரதிகுமார், முனைவர்கள் சுகுமாறன், ஜெயகுமார், கலைசெல்வி மற்றும் மாவட்டத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.