உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.ஆர்.கே., கல்லுாரியில் பேராசிரியர்களுக்கு பயிற்சி

எம்.ஆர்.கே., கல்லுாரியில் பேராசிரியர்களுக்கு பயிற்சி

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., கல்லுாரியில் ஆன்லைன் மூலம் நடந்த,பேராசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில், பல்வேறு நாடுகளில் இருந்து 135 பேராசிரியர்கள் பங்கேற்றனர். எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில், ஏ.டி.ஏ.எல்.,சார்பில், ஆன்லைன் மூலம்,பேராசிரியர் திறன் மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது. வாகனத் தொழிலில் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள்,தொழில் 4.0 கண்ணோட்டம் என்ற தலைப்பில் நடந்த இணைய வழி பயிற்சி முகாம் நடந்தது.துவக்க விழாவில் கல்லுாரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார்.கல்லூரி முதல்வரும், ஒருங்கிணைப்பாளருமான ஆனந்தவேலு வரவேற்றார். நிர்வாக அலுவலர் கோகுலகண்ணன்,மேலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, புதுச்சேரி என்.ஐ.டி., இணை பேராசிரியர் செந்தில்குமார் பங்கேற்று பேசினார்.திறன் மேம்பட்டு பயிற்சியில் பல்வேறு பல்கலைக் கழகங்கள், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சேர்ந்த பொறியியலாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 135 பேராசிரியர்கள் பங்கேற்பாளராக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ