உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு

டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு

பெண்ணாடம்: 'தினமலர்' செய்தி எதிரொலி காரணமாக, பழுதான டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் ஆண்டுதோறும் சம்பா நெல் நடவு துவங்குவது வழக்கம். பெண்ணாடம் அடுத்த பெரியகொசப்பள்ளம், துறையூர் கிராமங்களில் 30 ஏக்கர் பரப்பளவில், கடந்த 2 மாதங்களுக்கு முன் போர்வெல் பாசனம் மூலம் சம்பா நடவுப்பணி மேற்கொண்டனர்.பாசனத்திற்கு பயன்படுத்தும், கொசப்பள்ளம் எஸ்.எஸ். 3, 100 கே.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் கடந்த மாதம் 29ம் தேதி பழுதானது. ஆனால் மின் வாரியம் சீரமைக்காததால் பெரியகொசப்பள்ளம், துறையூர் கிராம பகுதிகளில் நடவு செய்த 30 ஏக்கர் பரப்பிலான நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் வயல்கள் வெடிப்போடி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.இதனை சுட்டிக்காட்டி, கடந்த 2ம்தேதி தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் நேற்று முன்தினம் பழுதான டிரான்ஸ்பார்மரை அகற்றி, புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தினர். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை