உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சப் கலெக்டரை கண்டித்து திருநங்கைகள் போராட்டம்

 சப் கலெக்டரை கண்டித்து திருநங்கைகள் போராட்டம்

சிதம்பரம்: சிதம்பரத்தில், சப் கலெக்டரை கண்டித்து திருநங்கைகள் 'திடீர்' போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அடுத்துள்ள மணலுார், லால்பூரம் பகுதியில் சுமார் 40 க்கு மேற்பட்ட திருநங்கைகள் வீடு வாடகை எடுத்து வசித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக, தங்களுக்கு மனை பட்டா வழங்கி வாழ்வாதாரம் காக்க வேண்டும் என கலெக்டர், சிதம்பரம் சப் கலெக்டர் என பல்வேறு தரப்பு அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை 20 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சிதம்பரம் சப் கலெக்டரை சந்திக்க வந்தனர். தொடர்ந்து, திருநங்கைகள் மைனா, அருவி, சமந்தா ஆகிய 3 பேர் மட்டும், சப் கலெக்டர் கிஷன்குமாரை சந்தித்து மனு அளிக்க அவரது அறைக்குள் சென்று, 'இலவச வீட்டு மனை,டிகிரி படித்த திருநங்கைகளுக்கு வேலை,சமூகத்தில் அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுஅளித்தனர். தொடர்ந்து சப்-கலெக்டரிடம் கோரிக்கைகள் குறித்து பேசியுள்ளனர். இதனால் கோபமடைந்த கலெக்டர் கிஷன்குமார், 'திருநங்கைகளை பார்த்து வெளியே போங்கள்' என சத்தம் போட்டுள்ளார். தொடர்ந்து சப் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் திருநங்கைகளை, அலுவலகத்தை விட்டு வெளியேற்றினர் . இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர் . போலீசார், திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்காத திருநங்கைகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீசாரின் காலில் விழுந்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சப் கலெக்டர் கிஷன்குமார், மீண்டும் திருநங்கைகளைஅலுவலகத்திற்குள் அழைத்து, பேச்சு வார்தை நடத்தினார். அதில், 'கோரிக்கைகள் கலெக்டரிடம், அனுப்பி தீர்வு காணப்படும்,வரும் 17 ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில்,அனைவரும் சென்று கலெக்டரை சந்தியுங்கள்,' என கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், திருநங்கைகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சப் கலெக்டர் கிஷன்குமார் விளக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை