தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ஸ்ரீமுஷ்ணம்: காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு ஸ்ரீமுஷ்ணத்தில் நகர வர்த்தக நல சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.வர்த்தக நல தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூவராகமூர்த்தி, துணை அமைப்பாளர் மகேஷ், நகர இளைஞரணி தலைவர் ஆதவன் உள்ளிடடோர் பங்கேற்றனர்.விருத்தாசலம்: பா.ஜ., ஒன்றிய தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். பிரசாரப் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலர் ஜெயச்சந்திரன், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் அனில்குமார், மாவட்ட துணை தலைவர் தேவராஜ், இந்து முன்னணி பிரமுகர் கமலக்கண்ணன், சிபி, உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவர் பாலு, வர்த்தகர் அணி ஜெயக்குமார், வெங்கடேசன், முனியன், வேலுமணி பங்கேற்றனர்.