உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

ஊராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

புவனகிரி : புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா, கலையரங்கம் திறப்பு மற்றும் கல்வி சீர் வரிசை வழங்குதல் என முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் முத்துபரமசிவம் தலைமை தாங்கி, கலையரங்கத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். தலைமை ஆசிரியர் சத்யநாராயணன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி, லட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருள்சங்கு முன்னிலை வகித்தனர். விழாவில் பெற்றோர்கள் பள்ளிக்கு சீர் வரிசை வழங்கினர்.விழாவில் ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் துரைமணிராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை