உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்தல் லாரி டிரைவர் கைது

கூழாங்கற்கள் கடத்தல் லாரி டிரைவர் கைது

விருத்தாசலம், ; கூழாங்கற்கள் கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைகண்ணு தலைமையிலான போலீசார், பாலக்கொல்லை பஸ் நிறுத்தத்தில் நேற்று வாகன சோதனை செய்தனர். அவ்வழியே டிப்பர் லாரியை மறித்து விசாரித்தபோது, 4 யூனிட் கூழாங்கற்களை கடத்திச் சென்றது தெரிந்தது.ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, லாரி டிரைவர் நடியப்பட்டு முருகன்கோவில் தெரு சேகர் மகன் ஜெயவேல், 27, என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் புதுப்பேட்டை வைத்தியநாதன் மகன் வெங்கடேசனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ