மின் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கிய இருவருக்கு வலை
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 52; பரங்கிப்பேட்டை மின் சாரவாரியத்தில் லைன் மேனாக பணிப்புரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.அப்போது, கொள்ளுமேடு பாலம் அருகே வரும்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கார்த்திகேயனை, பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த கார்த்திகேயன், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.