உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெடி பொருட்கள் விற்ற இருவர் கைது

வெடி பொருட்கள் விற்ற இருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் அனுமதியின்றி வெடி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக விருத்தாசலம் போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது.அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முல்லாத்தோட்டம் பகுதியில், குட்டைகாரன் தெருவைச் சேர்ந்த ஹரிபிரசாத், 42; பணிபூண்டார் தெருவைச் சேர்ந்த ஹர்சன், 28; ஆகியோர் உரிமம் இல்லாமல் வெடி பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ