உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று புதுக்கூரைப்பேட்டை அய்யனார் கோவில் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, புதுக்கூரைப்பேட்டை 10 வது தெருவைச் சேர்ந்த அரவிந்த், 32, என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, அரவிந்த் மற்றும் கஞ்சா வாங்க வந்த வேப்பூர் அடுத்த டி.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ், 37, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மேலும், அவர்களிடம் இருந்து கஞ்சா, 3 செல்போன், பைக் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ