கஞ்சா விற்ற இருவர் கைது
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, கர்னத்தம் காலனியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் காட்டுப்பரூர் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் விஜய்குமார், 20, மகாதேவன் மகன் மணி, 22, என்பதும், அவர்களிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்ததும் தெரிந்தது. மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.