உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், பெட்டிக்கடையில் குட்கா விற்ற இரண்டு வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை பெரிய மதகு பெட்டிக்கடையில் குட்கா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, பெட்டிக்கடையில் குட்கா விற்றுக்கொண்டிருந்த அகரம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன், 44; கார்த்தி, 35; ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 33 குட்கா பாக்கெட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ