உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.35 ஆயிரம் குட்கா பறிமுதல் விருதையில் இருவர் கைது

ரூ.35 ஆயிரம் குட்கா பறிமுதல் விருதையில் இருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மளிகை கடையில் 35 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, தொரவளூர் மளிகை கடையில் சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. கடை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் மகன் கேசவன், 49, என்பவரை கைது செய்து விசாரித்தனர்.அதில், வேப்பூர் அடுத்த குறிச்சியை சேர்ந்த ராஜகோபால் மகன் ரமேஷ், 45, என்பவரிடம் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்றது தெரிந்தது. அங்கு சென்று சோதனை செய்தபோது, 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து பஸ்சில் குட்கா பொருட்களை கடத்தி வருவது தெரிய வந்தது.இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, 35 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மளிகை கடை உரிமையாளர்கள் கேசவன், ரமேஷ் ஆகியோரை கைது செய்து, அவர்களது வங்கிக்கணக்குகளை முடக்கி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ