உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா வழக்கில் கைதான இரண்டு பேருக்கு குண்டாஸ்

குட்கா வழக்கில் கைதான இரண்டு பேருக்கு குண்டாஸ்

குட்கா வழக்கில் கைதான இரண்டு பேருக்கு குண்டாஸ்கடலுார், ஜூன் 24-கடலுாரில் குட்கா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கடந்த மே மாதத்தில், கூத்தப்பாக்கம் பகுதியில் இன்னாவோ காரில் இருந்து வேல்க்ஸ்வோகன் காரில் குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கிப்பிடித்து 384கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த பாபு,49, சிந்தாமணிகுப்பத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள்,41, சரவணன்,38, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதில் பாபு மீது போதைப்பொருள் கடத்தியதாக நான்கு வழக்குகளும், அய்யம்பெருமாள் மீது ஒரு வழக்கும் உள்ளது. இவர்களின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி.ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பாபு மற்றும் அய்யம்பெருமாளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை