மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கியவர் தலைமறைவு
31-Oct-2024
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே இரு சிறுமியர் கர்ப்பமானது தொடர்பாக, போக்சோ பிரிவில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.விருத்தாசலம் அருகே 17 வயதுடைய பிளஸ் 2 மாணவியும், அதே பகுதி வாலிபரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். கடந்த ஜூன் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. மாணவி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. புகாரின் பேரில், மாணவியின் கணவர் தொட்டிகுப்பம் ராஜ்குமார், 24, மாமனார் ராமகிருஷ்ணன், மாமியார் செல்வி, உறவினர் லட்சுமி ஆகியோர் மீது போக்சோ பிரிவின் கீழ் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்தார்.பத்தாம் வகுப்பு படித்த 16 வயது மாணவியை, தாய்மாமன் உறவுடைய வாலிபர் காதலித்து, வீட்டிற்கு தெரியாமல் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். மருத்துவ பரிசோதனையில் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.புகாரின் பேரில், மாணவியை கர்ப்பமாக்கிய ராஜாங்கம் மகன் இளவரசன், 27, என்பவர் மீது அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
31-Oct-2024