உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது பழக்கத்தால் இரண்டு பேர் சாவு

மது பழக்கத்தால் இரண்டு பேர் சாவு

கடலுார்: கடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடியில் குடிப்பழக்கம் காரணமாக இரண்டு பேர் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கடலுார் முதுநகர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம்,65. குடிப்பழக்கம் உள்ளவர். நேற்று முன்தினம் மாலை மதுபோதையில், தொண்டமாநத்தம் ரேஷன்கடை அருகே மயங்கி கிடந்தவரை,மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.இதேபோல், குறிஞ்சிப்பாடி அடுத்த அயன்குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் முருகவேல்,49. குடிப்பழக்கம் உள்ளவர். இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை மதுகுடித்துவிட்டு வந்தவரை மனைவி தட்டிக்கேட்டார். அதில் கோபமடைந்தவர், ஆடூர்அகரம் பரவனாறு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்தவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ