உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரு சக்கர வாகனம் திருடியவர் கைது

இரு சக்கர வாகனம் திருடியவர் கைது

சேத்தியாத்தோப்பு: இருசக்கர வாகனத்தை திருடி சென்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் மெயின்ரோட்டைச் சேர்ந்த கருணாநிதி மனைவி ராணி, 50; இவரது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த மொபட் வாகனம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருடுபோனது. இது குறித்து ராணி சேத்தியாத்தோப்பு போலீசி ல் புகார் கொடுத்தி ருந்தார். இந்நிலையில் வி.கே.டி., புதிய பைபாஸ் சாலையில் சேத்தியத்தோப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக மொபட்டில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தின ர். விசாரைணயில், ராணியின் மொபட்டை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலம் பாகூரை சேர்ந்த ஜான்சன்ராஜா, 55; என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ