உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் அர்ச்சகர்களுக்கு சீருடை; சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கல்

கோவில் அர்ச்சகர்களுக்கு சீருடை; சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கல்

நெய்வேலி; நெய்வேலியில் கோவில் அர்ச்சகர்களுக்கு சீருடைகளை எம்.எல்.ஏ., வழங்கினார்.நெய்வேலி டவுன்ஷிப் வளாகத்திற்குள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில் அர்ச்சகர்களுக்கும் பொங்கல் பண்டிகையை யொட்டி சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சீருடைகள் வழங்கினார். நெய்வேலி வேலுடை யான்பட்டு முருகன் கோவிலில் நடந்த பொங்கல் விழாவில் அனைத்து கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் சிப்பந்திகளுக்கு சீருடைகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி., தலைமை அலுவலக மனிதவளத்துறை பொது மேலாளர் திருக்குமார், என்.எல்.சி., நில எடுப்புத்துறை அதிகாரிகள் அண்ணாதுரை, ராமமூர்த்தி, தி.மு.க., மாவட்ட பொருளாளர் தண்டபாணி, நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், தி.மு.க., நகர நிர்வாகிகள் இளங்கோ, மதியழகன், செந்தில்குமார், கலைச்செல்வன், சந்திரசேகர், அருள்மணி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ