உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பல்கலை., கூட்டமைப்பு 23வது நாளாக போராட்டம்

பல்கலை., கூட்டமைப்பு 23வது நாளாக போராட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி 23வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு அனைத்து பணப் பயன்களையும் உடனடியாக வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பினர் பூமா கோவில் அருகில் நேற்று 23வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் துரை, குமரவேல், காமராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின், மே தினத்தையொட்டி ஊர்வலமாக சென்று, மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ