உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார், 30. டிரைவர். இவருக்கு திருமணம் செய்ய பெண் தேடியுள்ளனர். பெண் கிடைக்காததால் மனமுடைந்துள்ளார். திருமணமாகாத விரக்தியில் இருந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natchimuthu Chithiraisamy
அக் 26, 2025 11:36

கடவுள் இனம் அழிந்து விடும் என்று பெண்ணை அதிகமாக 55-60 சதவிகிதம் படைக்கிறான். மனிதன் தன் அறிவால் அதை இழக்கிறான். ஸ்கேன் கண்டுபிடிப்பு நல்லதுக்காக பயன்படுத்தப்படுவதில்லை. டாக்டர்களும் அதிகாரிகளும் அரசும் தவறு செய்கிறது. செய்த தவறுக்கு பணம் பெற்று அதை தின்னம்மல் வாரிசுக்கு கொடுத்து அதுவும் உண்ணாமல் சாகிறது. இதை மக்களுக்கு சொல்ல உயிர் விடவேண்டி இருக்கிறது. மருத்துவமனையில் செவிலியர்கள் FANTA / MIRANTA வார்த்தைகள் பயன்படுத்துவது அரசுக்கு தெரியாத.