மேலும் செய்திகள்
பள்ளியில் மருத்துவ முகாம்
31-Mar-2025
கடலுார் : கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சில்வர் பீச் முகப்பு பகுதியில் மணிக்கூண்டுடன் கூடிய நினைவுத்துாண் திறப்பு விழா நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் செந்தில்பாரதி தலைமை தாங்கினார். பொருளாளர் விஜய் ஆனந்த் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் பாஸ்கரன், நெடுஞ்சாலைத்துறை கடலுார் கோட்ட பொறியாளர் சிவக்குமார், விழிப்புணர்வு நினைவுத்துாணை திறந்து வைத்தனர். ரோட்டரி முன்னாள் ஆளுநர் மணி, பிறையோன், வைத்தியநாதன் பேசினர்.பப்ளிக் இமேஸ் சேர்மன் சிவசரவணன், உதவி ஆளுநர் வெங்கடேசன், ஆலோசகர் பூங்குன்றன் வாழ்த்திப் பேசினர். விழாவில் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் ஞானமணி, மதியழகன், பங்கஜம் பிளானர்ஸ் ஆறுமுகம், சுரேஷ்பாபு, ராஜசேகர், தலைவர் தேர்வு ரவி, செயலாளர் தேர்வு வரதராஜன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
31-Mar-2025