உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடலுார் தைப்பூச விழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்

வடலுார் தைப்பூச விழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்

கடலுார்; தைப்பூச விழாவை முன்னிட்டு, வடலுார் வழியாக 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.தென்னக ரயில்வே செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டம், வடலுாரில் தைப்பூச விழா, இன்று 11ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, இன்று முதல் 13ம் தேதி வரை, விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலம், நெய்வேலி, வடலுார் வழியாக கடலுாருக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.விழுப்புரத்தில் இருந்து காலை 9:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 9:55 மணிக்கு விருத்தாசலம் வருகிறது.அங்கிருந்து 10:37க்கு வடலுாருக்கும், 11:15 மணிக்கு கடலுாருக்கும் சென்றடைகிறது.கடலுாரில் இருந்து பகல் 11:50 மணிக்கு புறப்படும் ரயில் 12:18 மணிக்கு வடலுார் வந்து, பகல் 1:00 மணிக்கு விருத்தாசலம் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் பகல் 2:05 மணிக்கு விருத்தாசலத்தில் புறப்படும் ரயில் மதியம் 2:37 மணிக்கு வடலுார் வருகிறது. 3:10க்கு கடலுார் சென்றடையும். மாலை 3:20க்கு கடலுாரில் புறப்படும் மற்றொரு ரயில், மாலை 5:40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ