மேலும் செய்திகள்
ஆற்று நீரில் மூழ்கி முதியவர் பலி
03-Nov-2025
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே மேம்பாலத்தில் டாடா ஏஸ் வேன் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் படுகாயமடைந்தனர். அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த முல்லையூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி லட்சுமி, 70; ஆவினங்குடியில் உள்ள இவரது உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க, முல்லையூரில் இருந்து நேற்று மாலை டாடா ஏஸ் வேனில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் சென்றனர். முல்லையூர் இளங்கோவன் வேனை ஓட்டி சென்றார். மாலை 3:30 மணியளவில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் வேன் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டாடா ஏஸ் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், முல்லையூரைச் சேர்ந்த சுப்ரமணியன், 60; மகாராஜன் மனைவி நீலம்பாள், 55; சங்கர் மனைவி பொற்கொடி, 39; வினோத் மகன் அஸ்வந்த், 2; சந்தோஷ்குமார், 12; சந்துரு, 8; வினோத் மகள் தர்ஷினா, 5; உள்ளிட்ட 25 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் அவர்களை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
03-Nov-2025