மேலும் செய்திகள்
வேத நாராயணன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
12-Jul-2025
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி வேத நாராயண பெருமாள் சமேத கமலவள்ளிதாயார் கோவில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி வேத நாராயண பெருமாள் கோவில் கும்பாபிேஷகத்தை யொட்டி கடந்த 10ம் தேதி அனுக்ஞை, அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம் நடந்தது. 11ம் தேதி திருவாராதனம், ரக் ஷாபந்தனம், கும்பஸ்தானம், யாக சாலை ஹோமங்கள், சதுஸ்தான பூஜை, பூர்ணாஹூதி சாற்றுமறை நடந்தது.நேற்று முன்தினம் விஸ்வரூபம், திருவாராதனம், ஹோமங்கள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், விமான கலச திருமஞ்சனம், நான்காம் கால ஹோமங்கள், ஸ்ரீவிஷ்ணு காயத்ரி ஜப ஹோமம், ஸ்ரீசுதர்சன, நரசிம்ம மகாலட்சுமி ஹோமங்கள் நடந்தது.நேற்று காலை கோ பூஜை, விஸ்வரூபம், சந்தி ஹோமங்கள், மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடாகி, விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரியா பங்கேற்றார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முத்துக்குமரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
12-Jul-2025