உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீராணம் ஏரி நிரம்பியது உபரி நீர் வெளியேற்றம்

வீராணம் ஏரி நிரம்பியது உபரி நீர் வெளியேற்றம்

சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரி உபரி நீர் வி.என்.எஸ்., மதகு வழியாக விநாடிக்கு 530 கன அடி வெளியேற்றப்படுகிறது. சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் துவங்கும் வீராணம் ஏரி லால்பேட்டை வரை 14 கி.மீ., துாரம் உள்ளது. வீராணம் ஏரி மூலமாக கடைமடை டெல்டா பகுதிகளான சிதம் பரம், காட்டுமன்னார்கோ வில், புவனகிரி, கீரப்பாளை யம், குமராட்சி உள்ளிட்ட வட்டாரங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மெட்ரோ நிறுவனம் விநாடிக்கு 73 கன அடி தண்ணீரை பம்ப் செய்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு அனுப்பி வருகிறது. இந்தாண்டு 5 முறை ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் அதிகாரிகள் உபரி நீரை வெளியேற்றி வந்தனர். தற்போது, கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாற்றின் வழியாக வீராணம் ஏரிக்கு 980 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரிக்கு வரும் உபரி நீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் பாதுகாப்பு கருதி பூதங்குடி வி.என்.எஸ்., மதகின் மூன்று ஷட்டர்களையும் திறந்து வினாடிக்கு 530 கன அடி நீர் வெளியேற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி