வீரனார் குளம் துார்வார கிராம மக்கள் கோரிக்கை
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை வீரனார் குளத்தில் மண்டியுள்ள சம்பு புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்கலம்பேட்டையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வீரனார் கோவில் குளத்தினை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பொது மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், கால்நடை குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தில் கழிவுநீர் கலப்பதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தற்போது, குளத்தில் சம்பு புற்கள் அதி களவில் மண்டியுள்ளது. எனவே, குளத்தில் மண்டியுள்ள சம்பு புற்களை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.