மேலும் செய்திகள்
காய்கறி விதை தொகுப்பு
04-Aug-2026
குறிஞ்சிப்பாடி:தோட்டக்கலை துறையில் காய்கறி விதைத்தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆனந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குறிஞ்சிப்பாடி வட்டாரத்திற்கு ஆடி பட்டத்திற்கான காய்கறி விதை தொகுப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த தொகுப்பு பெற ஆர்வமுள்ள பயனாளிகள், www.tnhorticulture.tn.gov.inஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, ஒரு விதைத்தொகுப்பின் விலை ரூ.,30 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், பயனாளிகள் தங்களது ஆதார் அட்டை நகல் கொடுத்து ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில், விதை களைகளை பெற்றுக் கொள்ளலாம்.
04-Aug-2026