உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்

கடலுார்: வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தில் மாடுகளுக்கு மலடு நீக்க சிகிச்சை மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.கால்நடைத்துறை கடலுார் கோட்ட உதவி இயக்குனர் வேங்கடலட்சுமி தலைமையில், கால்நடை மருத்துவர் ராஜா, ஆய்வாளர்கள் ராஜமகேந்திரன், சகிலா உள்ளிட்ட குழுவினர் 200க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியும், 10 மாடுகளுக்கு திட்டமிட்ட இனப்பெருக்க சிகிச்சையும், தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தின் கீழ் 25பசுமாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டலும், 50 மாடுகளுக்கு சினை பரிசோதனை, கன்று மேலாண்மை மற்றும் குடற்புழு நீக்க சிகிச்சை, மடிநோய் கண்ட மாடுகளுக்கு அதற்கான சிகிச்சை வழங்கினர்.முகாமில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கன்று, தீவன மேலாண்மை மற்றும் நோய் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை