கால்நடை மருத்துவ முகாம்
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில், வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள், விருத்தாசலத்தில் தங்கி, வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அவர்கள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கருவேப்பிலங்குறிச்சியில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் பங்கேற்று, கால்நடைகள் வளர்ப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, டாக்டர் சரண்யா தலைமையிலான ஊழியர்கள், கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து, மருந்துகள் வழங்கினர். மாணவிகள் நித்திஷா, நித்யா, நித்யா கதிர்செல்வன், நித்யஸ்ரீ, பிரதீபா, பிரணவி, நிவேதா, நிவேதாஜாஸ்மின் ஆகியோர் கால்நடைகள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.