என்.எல்.சி.,யில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா
நெய்வேலி அக்.28-: என்.எல்.சி.,யில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, விழிப்புணர்வு: நமது கூட்டுப் பொறுப்பு என்ற கருப்பொருளின் கீழ் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா துவங்கியது. என்.எல்.சி., சுரங்கத்துறை சுரேஷ் சந்திர சுமன் தலைமை தாங்கினார். மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மின்துறை இயக்குநர் வெங்கடாசலம், நிதித்துறை இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு வார நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, மன்னன் மனு நீதிச் சோழனிடம், நீதி கேட்டு மணி அடித்த பசுவின் புராணக் கதையைச் சித்தரிக்கும் ஒரு செல்ஃபி ஸ்டாண்ட் திறந்து வைத்து,. சுரங்க இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன் பேசினார். என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு துறை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.